2013 பெப்ரவரி மாத நிகழ்வுகள்

பெப்ரவரி மாதத்தில் நடந்த சில நிகழ்வுகள்:
  • இலங்கையின் 65 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் திருகோணமலையிலுள்ள பிரட்ரிக் கோட்டைக்கு முன்பாகவுள்ள கடற்கரையோரத்தில் இடம் பெற்றன.
  • நெதர்லாந்து அரசின் நிதியுதவியுடன் திருகோணமலையில் அமைக்கப்பட்ட நூதனசாலை ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது.
  • இலங்கையின் டென்னிஸ் வீரர் அர்ஜூன் பெர்ணான்டோவுக்கு ‘டேவிஸ் கிண்ண அர்ப்பணிப்பு விருது’(Davis Cup Commitment Award) சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்தினால் வழங்கப்பட்டது.
  • சுரங்கத்தின் ஊடான நீரியல் பூங்கா பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் பியகமவில் திறந்து வைக்கப்பட்டது.
  • அரசாங்க மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 16 தொழிற்சங்கங்கள் இணைந்து “மலையக தொழிற்சங்க கூட்டமைப்பு” என்ற அமைப்பை ஆரம்பித்தன.
  • இலங்கை டெஸ்ட் கிரிக்கட் அணி, சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டிகளுக்கான இலங்கை அணியின் தலைவராக சகலதுறை வீரர் ஏஞ்சலோ மத்தியூஸ் நியமிக்கப்பட்டார்.
  • சர்வதேச கிரிக்கட் பேரவையின் சிறப்பு மகளிர் அணியில் இலங்கையின் துடுப்பாட்ட வீராங்கனை எஷானி கௌசல்யா பெயரிடப்பட்டார்.
  • 2020ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இருந்து மல்யுத்தம் நீக்கப்பட்டது.
  • சர்வதேச மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் ரபாயெல் மார்ட்டினெட்டி (  Raphael Martinetti  ) ராஜினாமா செய்தார்.
  • மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற மகளிர் உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் மேற்கிந்திய அணியை தோற்கடித்த அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
  •  பங்களாதேஷ் பிரீமியர் (BPL)லீக் போட்டியில் டாக்கா கிளேடியட்டர்ஸ் அணி சம்பியனாகியுள்ளது.
  • 20/20 போட்டிகளுக்கான தென்னாபிரிக்க அணியின் முழுநேர அணித்தலைவராக பவ்டூ பிளேனிஸ் நியமிக்கப்பட்டார்.
  • ரீவா ஸ்டீன்கெப்பை சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட தென்னாபிரிக்காவின் பரா ஒலிம்பிக் சம்பியன் ஒஸ்கார் பிஸ்டோரியஸ் ஒரு வார கால விளக்க மறியலின் பின் பிணையில் வெளியாகினார்.
  • சவூதி சூரா ஆலோசனைச் சபையில் முதன்முறையாக 30 பெண்கள் இணைக்கப்பட்டனர்.
  • பல்கேரிய பிரதமர் போரிசாவ் தலைமையிலான அரசு பதவி விலகியது.
  • ரஷ்யாவின் செலியாபின்ஸ்க் (Chelyabinsk)பிரதேசத்திலுள்ள யூரல் (Ural)மலைப்பிரதேசத்தில் எரிகல் விழுந்தது. இதன் காரணமாக சுமார் 1100 பேர் காயமடைந்தனர்.
  • அஸ்ட்ரொயிட் 2012DA14 (Asteroid 2012 DA14)எனப் பெயரிடப்பட்டுள்ள விண்கல் பூமியைக் கடந்து சென்றது.
  • பரம் யுவா 2 (Param Yuva II)  என்ற சுப்பர் கம்ப்யூட்டர் இந்தியாவினால் தயாரிக்கப்பட்டுள்ளது.
  • தென்கொரியாவின் முதலாவது பெண் ஜனாதிபதியாக பார்க் ஹியூன் ஹே(Park Geun-hye) பதவியேற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்டவர் முன்னாள் பிரதமர் மூன்ஜே.
  • கியுப ஜனாதிபதியாக ராவுல் காஸ்ட்ரோ(Raúl Castro) பதவியேற்றார்.
  • உயிரியல் விஞ்ஞான திருப்பு முனை பரிசு(Break through prize in life science) என்ற பரிசுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை வெற்றி பெறுபவர்களுக்கு 3 மில்லியன் டொலர் வழங்கப்படும்.. இம்முறை 11 விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படுகின்றது. அடுத்த ஆண்டிலிருந்து 5 பேருக்கு வழங்கப்படும். இந்நிதியத்தின் தலைவர் ஆர்ட் லெவின்ஸன்( Art Levinson)
  • 85 ஆவது ஒஸ்கார் விருது வழங்கும் விழா லொஸ் ஏஞ்சல் நகரில் இடம் பெற்றது. அதன் விபரங்கள்:
    சிறந்த திரைப்படத்திற்குரிய விருது ஆர்கோ( Argo) - பென் கப்லெக்கினால் இப்படம் இயக்கப்பட்டது.)
    சிறந்த நடிகருக்கான விருது  டேலூவிஸ் (Daniel Day-Lewis) - Lincoln (லிங்கன்)  படத்தில் நடித்தமைக்காக
    சிறந்த நடிகைக்கான விருது ஜெனிபர் லோரன்ஸ் (Jennifer Lawrence) -  சில்வர் லைனிங் பிளேபுக் (Silver Linings Playbook) படத்தில் நடித்தமைக்காக
    சிறந்த இயக்குனருக்கான விருது ஆங்லீ (Ang Lee) - லைப் ஒப் பை (Life of Pi) என்ற படத்தை இயக்கியமைக்காக
    சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்திற்கான விருது  “அமோர்” Amour என்ற திரைப்படத்திற்கு (இது ஆஸ்த்திரியா நாட்டு திரைப்படம்)
    சிறந்த இசை – மைக்கல் டன்னா Mychael Danna - லைப் ஒப் பை திரைப்படத்திற்காக )
    சிறந்த பாடல் - அட்லி அட்கின்ஸ் (Adele Adkins) போல் எப்வோர்த் (Paul Epworth) ஆகியோருக்கு - ஸ்கை போல் (Sky Fall) படத்தில் பாடியமைக்காக)
  • இந்தியாவில் 2001 பாராளுவமன்ற தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அப்சல் குருவுக்கு புது டில்லி தீஹார் சிறையில் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது.
  • அமெரிக்காவின் பாடகி மிண்டி மெக்கிரடி (Mindy" McCready) தற்கொலை செய்துள்ளார்.
  • ஈக்குவடோர் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரபேல் கோரெரா (Rafael Correa) மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
    வடகொரியா தனது மூன்றாவது அணுப் பரிசோதனையை நடத்தியது.

கருத்துரையிடுக

புதியது பழையவை