2013 ஜனவரி மாத நிகழ்வுகள்..

ஜனவரியில் நடந்த நிகழ்வுகள் சில சுருக்கமாக

  • இலங்கையின் 44ஆவது பிரதம நீதியரசராக முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் நியமனம்.
  • கானாவின் புதிய ஜனாதிபதியாக ஜோன் மகாமா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
  • மாலைதீவு ஜனாதிபதியின் கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒரு கட்சி குறைந்தது 10000 உறுப்பினர்களையாவது கொண்டிருக்க வேண்டும் என்பது அந்நாட்டு சட்டமாகும். ஆனால் ஜனாதிபதியின் கட்சியான காங்மீ இஹ்திஹாத் 3427 உறுப்பினர்களை மட்டுமே கொண்டு காணப்பட்டது.
  • இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கைடி அல்விஸ் காலமானார். இவர் இலங்கை அணியில் விக்கெட் காப்பாளராகவம் துடுப்பாட்ட வீரராகவும் கடமையாற்றியவர்
  • ஹொலிவூட்டில் இடம்பெறும் கோல்டன் குளோப் விருது விழா அமெரிக்காவின் பெவேர்லி ஹில்ஸ் நகரில் நடைபெற்றது.
  • 2013ஆம் ஆண்டுக்கான மிஸ் பெல்ஜியமாக நயோமி ஹப்பார்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
  • மிஸ் அமெரிக்கா அழகு ராணியாக மெலோரி ஹேகன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
  • அதிவேகத்தில் வாகனம் ஓட்டியதற்காக ஷேர்ன் வோர்னுக்க அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
  • ஐ.சி.சி யினால் வழங்கப்படும் ஹோல் ஒப் பேம் (Hall of Fame) விருது கிளென் மெக்ராத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது வழங்கப்படுகின்ற 68 ஆவது வீரர் இவராவார்.Hall of Fame 1990ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
  • வருடத்தின் மிகச்சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான பெலோன் டி ஒர் விருதை ஆர்ஜென்டீனாவின் லயனல் மெஸ்ஸி வென்றுள்ளார். இவ்வாறு இந்த விருதைப் பெற்றுக்கொள்வது நான்காவது தடவையாகும்.
  • 2020இல் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த மூன்று நகரங்கள் போட்டி.
இஸ்தான்புல்(துருக்கி)
மாட்ரிட்(ஸ்பெயின்)
டோக்கியோ(ஜப்பான்)
  • ஜப்பானில் நடைபெற்ற உலக குத்துச் சண்டை சங்கத்தின் மினிமம் வெய்ட் சம்பியன்சிப் பட்டத்திற்கான குத்துச் சண்டை போட்டியில் ஜப்பானிய வீரர் ரியாவோ மியாஸகி வெற்றி பெற்றுள்ளார்.
  • 2013ஆம் ஆண்டுக்கான ஹொப்மன் ( Hopman) கிண்ண கலப்பு அணி டென்னிஸ் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் சேர்பியாவை 2-1 என்ற ஆட்டத்தில் வென்ற ஸ்பெயின் சம்பியனானது.
  • ஹொக்கி இந்தியா லீக் முதலாவது போட்டித் தொடர் இந்தியாவில் ஆரம்பம். இதில் ஐந்து அணிகள் பங்குபற்றுகின்றன.


கருத்துரையிடுக

புதியது பழையவை