இந்த உலகில் அனைவரும் சமமானவர்கள். சமய, மொழி, நாடு, உடல், தொழில் போன்றவை ஆளுக்கால் வேறுபட்டாலும் மனிதர்கள் அனைவரும் சமமானவர்கள். இந்தக் கொள்கையை நிலைநாட்டுவதற்காக காலத்திற்குக் காலம் பல விடயங்கள் உலகில் நடந்தேறி வருகின்றன.
அந்த வகையில் பார்வையற்றவர்களை அரவணைப்பது நமது கடமையாகும். பார்வையற்றவர்களின் வசதிக்காக பல்வேறு கண்டுபிடிப்புக்கள் ஏற்பாடுகள் காணப்படுகின்றன. அண்மையில் எகிப்தில் பார்வையற்றவர்களுக்கான கடற்கரை திறந்து வைக்கப்பட்டது. எகிப்தின் அலக்ஸாந்திரியா பிரதேசத்தில் Mandara எனும் கடற்கரை காணப்படுகிறது.
கடற்கரையில் குறிப்பிட்ட பிரதேசம் விஷேட கயிறுகளினால் எல்லைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த எல்லைக்குள் செல்வதற்காக நுழைவாயில் காணப்படுகிறது.
பார்வைக் குறைபாடுடையவர்கள் இந்தக் கடற்கரையில் ஆர்வத்துடனும் சந்தோசமாகவும் நீராடி வருகிறார்கள். இவர்கள் சுயமாக நீந்தி நீராடுவதாக இந்த ஏற்பாடு காணப்பட்டாலும் இவர்களை மேற்பார்வை செய்வதற்காக பாதுகாவலர்கள் காணப்படுகிறார்கள். பார்வையற்றவர்களின் கழுத்துக்களில் விசில்கள் காணப்படுகின்றன. அவர்கள் ஆபத்தை உணர்ந்தால் அந்த விசிலை ஊதி பாதுகாவலர்களின் உதவியைப் பெற்றுக் கொள்ள முடியும்.
கடந்த வருடம் எகிப்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட People of Determination Beach எனும் கடற்கரையின் ஒரு பகுதியாக இந்தக் கடற்கரை காணப்படுகின்றது.