வெண்கலப் படுக்கையுடன் கூடிய பெண்ணொருவரின் புதைகுழி ஒன்றை வட கிரேக்கத்தில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது கி.மு முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. கட்டிலின் கால்கள் கடல் கன்னிகளின் வடிவங்களை பிரதிபலிக்கின்றன.
![]() |
இவ்வாறுதான் வெண்கலக் கட்டில் காணப்பட்டது. சிறிதளவு மரமும் பாவிக்கப்பட்டுள்ளது. |
வாயில் பாம்பொன்றைக் கவ்வியுள்ள பறவையொன்றின் வடிவத்தை சித்தரிக்கும் வகையில் கட்டில் காணப்படுகின்றது. இந்த சித்தரிப்பானது புராதன கிரேக்க கடவுளான அப்பல்லோவை சித்தரிக்கின்றது.
பெண்ணின் தலையானது லோரல் (Laurel) இலைகளால் சுற்றப்பட்டுள்ளது. கைகளில் தங்க நூல்கள் காணப்படுகின்றன. களிமண் பானைகள் நான்கும் கண்ணாடி குவளையும் இந்தப் பெண்ணுடன் சேர்த்து புதைக்கப்பட்டுள்ளன.
தனியாகவே இந்தப் பெண் புதைக்கப்பட்டுள்ளார். கூட யாரும் புதைக்கப்படவில்லை.
இந்தப் பெண்ணுடன் காணப்படுகின்ற நகைகளைப் பார்க்கின்ற பொது இவர் செல்வந்த குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்தப் பெண்ணின் எச்சங்கள் தற்போது கிரேக்கத்திலுள்ள நூதனசாலையொன்றில் வைக்கப்பட்டுள்ளன.
இந்தப் பெண்ணின் புதைகுழி கடந்த 2019 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் 2021 ஆம் ஆண்டில் இரும்புப் படுக்கையில் வயது முதிர்ந்த ஆணொருவரின் எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டது.
![]() |
தேவதைத் தலை அடையாளமும் கட்டிலில் காணப்படுகிறது. |
ஆங்கில இணையத் தளங்களில் வந்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கட்டுரை ஆக்கப்பட்டுள்ளது.