Burak Ozdemir
இவரை சமூக வலைத்தளங்களில் அதிகமானோர் பார்த்திருப்பீர்கள். சமூக வலைத்தளங்களில் CZN Burak என்ற பெயரில் பிரபல்யமானவர். இவர் ஒரு சமையற்கலை நிபுணர். அத்துடன் உணவக உரிமையாளருமாவார். புன்னகையுடன் கூடிய முகத்துடன் வித்தியாசமான முறையில் இவர் சமைக்கும் காணொளிகள் உலகப் பிரசித்தம் பெற்றவை. பாரியளவிலான கெபாப் (Giant - sized Kebab) உணவுகளை சிறப்பாகச் செய்து புகழ் பெற்றவர். இவர் துருக்கியைச் சேர்ந்தவர். சிரிய அறபு வம்சாவளியைச் சேர்ந்தவர்.
2021 ஆம் ஆண்டைய தரவுகளின் அடிப்படையில் இவர் Youtube இல் 2.89 மில்லியன் சந்தாதரர்களையும் (Subscribers)டிக்டொக்கில் 46.7 மில்லியன் பின்பற்றுனர்களையும் (Followers) ட்விட்டரின் 549100 பின்பற்றுனர்களையும் (Followers) இன்ஸ்டாகிரமில் 25.9 மில்லியன் பின்பற்றுனர்களையும் (Followers) கொண்டுள்ளார். இவர் நடாத்தி வருகின்ற உணவகமான Hatay Medeniyetler மூன்று கிளைகளைக் கொண்டுள்ளது. துருக்கிய பாரம்பரிய உணவுகளையும் மத்திய கிழக்கு உணவகங்களையும் இவருடைய உணவகம் வழங்குகிறது.
பல பிரபலங்களும் இவருடைய உணவகத்திற்கு வருகை தந்து இவருடைய உணவை ரசித்திருக்கின்றனர். யுடியுப் பிரபலம் Atta Halilintar பாடகர் Virgoun அத்துடன் விளையாட்டு வீரர் Mesut Ozil மற்றும் துருக்கிய ஜனாதிபதி எர்டோகானும் இவருடைய உணவகத்திற்கு விஜயம் செய்தவராவர்.
அண்மைக்காலத்தில் இவர் சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அறிய முடிகிறது.