:இலங்கை நிகழ்வுகள்:
*சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத யூரோ 4 ரக பெற்றோல் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
*இலங்கையின் திரைப்பட இயக்குனரும் நடிகருமான ரோய் டி சில்வா மரணமானார்.
*.கணக்காய்வு சட்டமூலம் பாராளுவமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
*தனது சர்ச்சைக்குரிய உரையைத் தொடர்ந்து இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தன்னுடைய பதவியை இராஜிநாமா செய்தார்.
*.பாண் தவிர்ந்த பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டன.
*.மொரகஹந்த களுகங்கை பாரிய அபிவிருத்தித் திட்டத்தின் களுகங்கை நீர்த்தேக்கத்தில் மங்கள நீர் நிரப்பல் விழாவும் , மொரகஹந்த – களுகங்கை சுரங்கக் கால்வாய் நிர்மாணப் பணியை ஆரம்பிக்கும் வைபவமும் நடைபெற்றது. ஜனாதிபதி பிரதம அதிதியாக கலந்து கொண்டார். களு கங்கை நீர்த் தேக்கத்தின் மூலம் 25 மெகா வோட் மின்சாரம் நாட்டின் மின் கட்டமைப்புக்கு கிடைக்கின்றது. இத்திட்டங்களுக்கு சவுதி கடனுதவி வழங்குகிறது
:உலக நிகழ்வுகள்:
*.தாய்லாந்தின் தம் லுவங் நாங் நொன் (Tham Luang Nang Non) குகையில் அகப்பட்டுக் கொண்ட 12 சிறுவர்களும் அவர்களின் உதைப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளரும் மீட்புப் பணியாளர்களினால் மீட்கப்பட்டனர்.
*.மெக்சிகோ ஜனாதிபதித் தேர்தலில் இடது சாரி வேட்பாளர் அன்ட்ரெஸ் மனுவேல் லோபஸ் ஒபராடோரின் வெற்றி பெற்றார்.
*.மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் கைது செய்யப்பட்டார்.
*.துருக்கிய ஜனாதிபதியாக எர்டோகான் பதவியேற்றுக் கொண்டார். துருக்கிய பாராளுவமன்ற, ஜனாதிபதித் ;தேர்தல்கள் கடந்த மாதம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
*.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீனா பிரதமர் புட்டின் ஆகியோர் பின்லாந்தில் சந்திப்பை மேற்கொண்டனர்.
:விளையாட்டு:
*.உலக உதைப்பந்தாட்டப் போட்டியின் இறுதியாட்டத்தில் குரொஷியாவை 4:2 கோல் கணக்கில் பிரான்ஸ் வீழ்த்தியது. பிரான்ஸின் இரண்டாவது வெற்றி இதுவாகும். இதற்கு முன் பிரான்ஸ் 1998 இல் கிண்ணத்தை வென்றிருக்கிறது. அடுத்த உலக உதைப்பந்தாட்டப் போட்டிகள் 2022 இல் கட்டாரில் இடம்பெற இருக்கிறது.
பின்வரும் விருதுகளைப் பெற்றோர் :
தங்கப்பாதணி : ஹெரிகேன் (ஐக்கிய இராச்சியம்) 06 கோல்கள்
தங்கக் கையுறை : திபவுட் கோர்டொயிஸ் (Thibaut Courtois) ( பெல்ஜியம்)
தங்கப் பந்து : லூகா மொட்ரிக் ( குரொஷியா)
பீபாவின் இளம் வீரர் : ம்பப்பே (Kylian Mbappe)
நியாயமான ஆட்டத்திற்கான பீபா விருது : ஸ்பெய்ன்