உலக நிகழ்வுகள் நவம்பர் 2020

இலங்கை விமானப்படையின் 18 ஆவது தளபதியாக எயார் மார்ஷல் சுதர்சன பத்திரண தன்னுடைய கடமையைப் பொறுப் பேற்றுக் கொண்டார்.

இலங்கையின் 35 ஆவது புதிய பொலிஸ் மா அதிபராக சீ.டீ. விக்கிரமரத்ன பதவியேற்றார். 

18 பாராளுவமன்ற உறுப்பினர்களை  உள்ளடக்கிய, அரசாங்க நிதி பற்றிய குழு பாராளுவமன்றத்தில் சபாநாயகரினால் அறிவிக்கப்பட்டது. இந்தக் குழு தற்போதைய ஒன்பதாவது பாராளுவமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடரில் பணியாற்றுவதற்கானதாகும்.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் இலங்கைக்கு விஜயம் செய்தார்.

ஜேம்ஸ்பொண்ட் கதாபாத்திர நடிகர் சீன் கொனரி தனது 90 ஆவது வயதில் காலமானார்.

பாரிஸ் உடன்படிக்கையில் இருந்து உத்தியோகபூர்வமாக அமெரிக்கா விலகியது. காலநிலை மாற்ற சவால்களை எதிர்கொள்வதற்காக 2015 ஆம் ஆண்டு இந்த உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் ஒரு நாளில் கொரோன அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தைத் தாண்டியது.

அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் தெரிவு செய்யப்பட்டார். 

உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 60 மில்லியனை அடைந்த அதே வேளை கொரோனா காரணமாக மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1.5 மில்லியனை எட்டியது.

பஹ்ரைன் பிரதமரான இளவரசர் கலீபா பின் சல்மான் அல் கலீபா தன்னுடைய 84 ஆவது வயதில் காலமானார்.

மியன்மாரில் இடம் பெற்ற பொதுத்தேர்தலில் ஆங் சாங் சூகியின் கட்சியான தேசிய லீக் கட்சி பெரும்பான்மையைப் பெற்றது. 

கொரோனா தொற்றால் உலகத்தில் ஒரு நாளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10010 என்ற எண்ணிக்கையை அடைந்தது. 

பிலிப்பைன்ஸைத் தாக்கிய லுசோன் சூறாவளியினால் அறுபதுக்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

கொங்கோ நாட்டில் பரவியிருந்த எபோலா நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்தது. கடந்த ஜீன் மாதத்திலிருந்து கொங்கோவில் எபோலா நோய் பாதிப்புக்களை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குவான்தமாலாவின் பாராளுவமன்றம் ஆர்ப்பாட்டக்காரர்களால் தீ வைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டது. பாராளுவமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரவுசெலவுத்திட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றது. 

நிலவிலிருந்து பாறை மாதிரிகளைப் பெறுவதற்கு சீனா விண்கலமொன்றை நிலாவுக்கு அனுப்பியது.

ஆர்ஜண்டினாவின் கால்பாந்து வீரர் டியாகு மரடோனா மாரடைப்பு காரணமாக காலமானார்.

சர்வசேச கிறிக்கட் சபையின் தலைவராக நியுஸிலாந்தைச் சேர்ந்த கிரேக் பார்க்கிளே தெரிவானார். 

ஐ.பி.எல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கிறிஸ் கெய்லுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தனது துடுப்பு மட்டையை வீசி எறிந்தமைக்காக ஐ.பி.எல் சம்பளத்தில் 10 வீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.

அவுஸ்திரேலிய கிரிக்கட் அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரரான ஷேன் வோட்சன் சகல வகையான போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

சனத் ஜெயசூரிய மீது விதிக்கப்பட்ட கிறிக்கட் தொடர்பான விடயங்களில் ஈடுபடுவதற்கான இரண்டு ஆண்டு தடை நிறைவுக்கு வந்தது.

உலக நிகழ்வுகளை சுருக்கமாக அறிந்து கொள்ள www.ulahavalam.com என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசியுங்கள்.




கருத்துரையிடுக

புதியது பழையவை