உலக நிகழ்வுகள் ஜூன் 2019

அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் மாவட்ட அலுவலகம் முல்லைதீவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இது அரசாங்க தகவல் திணைக்களத்தின் 23 ஆவது மாவட்ட அலுவலகமாகும். 

தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவராக மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க நியமிக்கப்பட்டார்.

2019 முதல் காலாண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3.7 சதவீதம் என புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்தது. 

ஆசியாவில் கலந்துரையாடல் மற்றும் நம்பகத்தன்மையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் பற்றிய 5ஆவது மாநாட்டில் (CICA) தஜிகிஸ்தானில் நடைபெற்றது. இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்து கொண்டார். இந்த அமைப்பு 1992 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. 2012 இலிருந்து பார்வையாளராகவும் 2018.08.15இலிருந்து உறுப்பினராகவும் இலங்கை செயற்பட்டு வருகின்றது.

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் ஏற்பட்ட எபோலா நோயின் பாதிப்பினால் 2000 இற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

சந்தேக நபர்களை சீனாவுக்கு அனுப்பும் சட்டத்திற்கு எதிராக ஹொங்கொங்கில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

பிரெஞ்ச் ஓப்பன் ஆடவர் பிரிவில் ரபேல் நடால் வெற்றி பெற்றார். இது அவரது 12 ஆவது பட்டமாகும்.
பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஆசிப் அலி ஸர்தாரி ஊழல் எதிர்ப்பு முகமையால் கைது செய்யப்பட்டார்.

உகண்டாவில் எபோலா தொற்று நோய் பரவியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது,

ஈக்வடோரின் அரசமைப்பு நீதிமன்றம் ஓரினத் திருமணத்திற்கு அனுமதி வழங்கியது.
.
மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான மொஹமட் நஷீட் தலைமையிலான உயர்மட்டக் குழு வந்தது..

சில வகை குற்றங்களை செய்தவர்களை நாடு கடத்தும் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹொங்கொங்கில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வந்தது. எனினும் அந்த சட்டம் இடை நிறுத்தப்பட்டாலும் நிரந்தரமாக கைவிட வேண்டும் என்றும் ஹொங்கொங்கின் தலைமை நிறைவேற்று அதிகாரி கெர்ரி லாம் பதவி விலக வேண்டும் என்றும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்தியாவின் 17 ஆவது பாராளுவமன்றத்தின் கூட்டத் தொடர் ஆரம்பமாகியது.

எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி முஹம்மத் முர்ஸி மரணமடைந்தார்.

யுனிசப்பின் (Unicef) இலட்சனையில் பெற்றோர் சின்னம் தற்காலிகமாக நீக்கப்பட்டது.

ஐ.நா வின் புதிய அறிவிப்புக்கள் :
உலக சனத்தொகை 2050இல் 9.7
2100 இல் 11 பில்லியன்
தற்போது மனிதர்களின் சராசரி ஆயுள் 72.6 ஆண்டுகள்
2050இல் மனிதர்களின் சராசரி ஆயுள்  77.1 ஆண்டுகள்

ஐ நா அகதிகள் நிறுவனத்தின் அறிக்கை
கடந்த ஆண்டு உலக அகதிகளின் எண்ணிக்கை 70 மில்லியனாக அதிகரித்தது.
அகதிகளின் எண்ணிக்கையில் சிரியா முதலிடம்  6.7 மில்லியன்
ஆப்கானிஸ்தான் 2.7 மில்லியன்

வடகொரியாவுக்கு விஜயம் செய்த சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் வடகொரிய தலைவரைச் சந்தித்தார்



ஜோர்ஜியா செல்லும் விமானச் சேவைகளுக்கு ரஷ்யா தற்காலிகமாகத் தடை விதித்து.
ஜோர்ஜிய பாராளுமன்றத்தில், ரஷ்ய பாராளுமன்ற உறுப்பினர் உரையாற்றியது தொடர்பில் கலவரம் மூண்டதைத் தொடர்ந்து அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

எத்தியோப்பிய இராணுவத் தளபதி ஜெனரல் சீரே மெக்கொனன்  சுட்டுக்கொல்லப்பட்டார்.

துருக்கியின் இஸ்தான்புல் நகர மேயருக்கான தேர்தலில் CHP கட்சியைச் சேர்ந்த  Ekrem İmamoğlu என்பவர் வெற்றி பெற்றார். தையிப் எர்துகானின் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் தோல்வியடைந்தார்.

கருத்துரையிடுக

புதியது பழையவை